இது ஒரு காதல் நாயகனின் வரலாறு

History of Romantic Hero







என் காவிய நாயகிக்கு இதோ என் சமர்ப்பனம்




என் கிறுக்கல்கள் இதோ


சாவாய் நீ நெஞ்சமே - சல்லிய என்னைந்
ஆவதன் கீழ் ஒன்றானும் நிற்க ஒட்டாய் - ஓவாதே
கட்டழிந்து என்னை காமக்கடலுக்கு ஈர்ப்பாயே
விட்டு எழுங்கால் நீ என்னாவாய்



அர்த்தம்


அவள் அன்றே
சொன்னால் - எனக்கு
தெரிந்தது உனக்கு தெரியது என்று
பிறகு தான் புரிந்தது அவளுக்கு
ஏமாற்ற தெரியும் என்று ! ! !



















பூக்களை பறித்து விட்டு
புன்னகைக்கிறவர்களை
ரசிப்பதில்லை அவள்
கை வீசினால்
காற்றுக்கும் வலிக்குமென்று
நடப்பவள்என்னவள்




என்காதல்!




நாட்கள் ஒடின‌
என் காதலும் வளர்ந்தது!
கருவுற்ற பெண்ணின்
வயிற்றைப் போல‌
என்றாவது ஒரு நாள்
வெளியில் தெரியப் போவுது
என் காதல்!

சொந்தங்கள் மறுத்து காதல்
கை கூடவில்லை என்றால்செத்துவிடுவேன் என்றாய்!.
தினம் தினம் நீ
என்னைப் பிரியும் போதுநான் சாவதை மறந்து!



கடல்
யானை
குழந்தை
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காது என்பார்கள்.
எப்படி மறந்தார்கள் ?
உன்னை
இந்த பட்டியலில் சேர்க்க.....





தம் அடிக்காதே.. தண்ணி அடிக்காதே
அவன்
கூட சேராத.. இவன் கூட சேராத
அஞ்சு
மணிக்கு எழு.. அப்பா பேச்ச கேளு
ஊர் சுத்தாத.. உருப்படற வழிய பாரு
இப்படி
என்ன சொன்னாலும் செய்கிறேன்
நீ என்னை காதல் செய் ....


தாத்தாவின் சவ ஊர்வலத்தில்
அழுதேன் கூட்டத்தில் மிதிபடும்
ரோஜாக்களை நினைத்து,,,,


காதல்

உனக்காக நான் வாங்கும்
ஒற்றை ரோஜாவை
தேர்ந்தெடுக்கஆகும்
காலதாமதத்தை பற்றி
கவலைப்படும் பூக்காரனுக்குதெரியுமா

நம் காதலைப் பற்றி?



சொர்க்கம் என்னுமிடத்தில்
நான் உன்னைச் சந்திக்காவிட்டால்.........
அந்த இடம்
சொர்க்கமாக இருக்க முடியாது....



எனது வழிகாட்டிகள்























ஏனென்று கேட்க நாதியில்லை !

வாவென்று சொல்ல வாயில்லை ! !

இன்பத்தை பங்கு கொள்ள நண்பனும் இல்லை ! ! !

துன்பத்தை தோள் தாங்க ஒரு தோழியும் இல்லை ! ! !

இது

நான் வாங்கி வந்த வரமா ! ! !

இல்லை

சாபமா ! ! !




உன்னை பற்றி எழுதிட எனக்கு பக்கங்கள் போதவில்லை!
ஆனால், இத்துடன் முடித்து கொள்ள எனக்கு மனமுமில்லை!
உன்னை பற்றி எழுதுவதற்கு எல்லையே இல்லை…
ஆனால், இவற்றை எழுதிய எனக்கு தொல்லையே இல்லை….
என் தேவதைக்கான கவிதை பக்கங்கள்…..
என் மனச்சுரங்கத்தில் வெட்டியெடுத்த கட்டி தங்கங்கள்…
என்னவள் மனதை அலங்கரிக்கும் அழகு ஆபரணங்கள்…
தேவையில்லை, எனக்கு வார்த்தை ஜாலங்கள்,என் உளறல்களையும் புரிந்து கொள்வாள் என்னவள்…



உன்னை பார்த்தவுடன் தோன்றுவது,
கவிதை……
நீ பிரியும் போது தோன்றுவது,
காதல்…….





உன் பிரிவினில்




உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை,


உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை,


உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்லை,


ஆனால், உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும்










நான் பார்த்தது தவறில்லை



நான் பார்த்தது தவறில்லை, பார்வை மாறியது தான் தவறோ!


எனக்கு நீயின்றி வேறில்லை, நீ தான் வேறோ……!


உன் சம்மதமின்றி காதல் இல்லை, உன் சம்மதம் தான் கானல் நீரோ!






என் எண்ணங்களில் எல்லாம்

வண்ணம் கொண்டு நிறைபவள்..

கற்பனைகளில் காலம் கடத்தி வந்தவனை,

நிஜத்தில் மூழ்கடித்தவள்…

நான் எதிர்பார்த்திருந்த தருணங்களை,
எனக்கு தருவித்தவள்…
நான் செய்கிற குறும்புகளையெல்லாம்,
ரசிக்கின்ற ரசிகையானவள்….
நான் சோகக்கடலில் நீந்திய போதெல்லாம்,
நேசக்கரம் நீட்டியவள்…
நான் என் மனதைத் தொலைத்த நின்ற போது,
நான் அறியேன் என்று சொன்ன பொய்யானவள்…





யோசிக்கிறாய்




உன் அருகில் அமர்ந்து உன் சுவாசத்தை சுவாசிக்க நினைத்தேன்…..

ஆனால் நீ என் அருகிலிருந்தும் என்னை நேசிக்க யோசிக்கிறாய்….






முத்தம்



யார் இதழ்குள் யாரோ


உன் வாய் ஜாலத்தினால், என் இதழ்கள்


அசந்து கிடப்பதாலோ இப்படி என்னை


அசரவைக்கிறாய்


மௌனம் கலைக்க வார்த்தைகள் என் வசமில்லை


என் வசம் இருப்பது . . . .





ஆனந்தம்




இன்பம் பேரானந்தம் என்றால்


அன்பே !


உனக்காக நான் அழுவதும் ஆனந்தமே ! ! !



மனைவி


தாயிற்கு அடுத்து நமக்கு தாயாய் இருப்பாள்


உணர்வுகளை சங்கமித்து உயிரை கொடுப்பாள்


என்னை எனக்கே அறிமுகம் செய்தாள்


தாயிற்கு அடுத்து தாரத்தை வைத்தவன்


தாரத்திற்கு அடுத்து யாரை வைத்தனோ


நாம் துவண்ட வேளையில்


தோள் தாங்கி ஊன்றுகோலாய் இருப்பவளுக்கு


நாம் என்ன செய்தோம்


இன்னும் 33 யை தாண்டவில்லையே ! ! !










நீ பரீட்சையில் தவறு விட்டது
உன் மறதியால்....
நான் பரீட்சை













யை








தவறு விட்டது......


உன் ஞாபகத்தால்.....
*****************************************




































கவிதைகள் கசியவிட்ட

பேனாவின் சொந்தக்காரன்.,

சு.சேஷாத்திரி